Thursday, September 21, 2017

அஞ்சல் மேற்பார்வையாளர் சங்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்து பொறுக்க முடியாமல் புழம்பும் மாற்று சங்கத்து சகோதரர்களே ....

அங்கீகாரம் இல்லை, உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை, மாதாந்திரப் பேட்டிகள் எல்லாம் எங்கள் சங்கத்திற்கு தரக்கூடாது என்று எல்லாம் பொய்பரப்புரைகளைக் கூறித்திரியும் தாங்கள் கீழ்க்காணும் உண்மைத் தகவல்களுக்கு பதிலளிக்கத் தயாரா?

  1. 1995ல் உறுப்பினர் சரிபார்ப்பின் இயக்குனரக உத்தரவின்படி, எழுத்தர்கள் எழுத்தர் சங்கத்தில் தான் இருக்க வேண்டும் எனவும், தபால்காரர்கள் தபால்காரர் சங்கத்தில் தான் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட இலாகா, மேற்பார்வையாளர்கள் மட்டும் மேற்பார்வையாளர் சங்கத்தில் இருக்கலாம், எழுத்தர் சங்கத்திலும் இருக்கலாம் என்று விதிமுறைகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க குறுக்கு வேலைகள் பார்த்தது யார்?

2. அஞ்சல் ஆய்வாளர்களை(IP),  அஞ்சல் எழுத்தர்கள்  சங்கத்தில் இணைய அரசு ஒத்துக் கொள்ளுமா? நீங்கள் ஏன் அதற்கும் குரல் கொடுக்கவில்லை? முடியுமா?

3. சூப்பர்வைசர்கள் மட்டும் கடைசிவரை எழுத்தர்களாகவே  இருக்கவும், எழுத்தர் சங்கத்திலே இருக்கவும் துடிப்பது ஏன்?

4.  உறுப்பினர் சரிபார்ப்பில், ஒருசார்பு இலாக்கா உத்தரவினை எதிர்த்து 1997ல் AIAPS சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இலாக்காவின் இத்தகைய நிலைப்பாடினை சரியான முறையில் நீதிமன்றத்தில் இலாக்கா நிருபிக்கத் தவறியதால், சூப்பர்வைசர்கள் எழுத்தர்களில் உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவது தவறு, எனவே சூப்பர்வைசர் சங்கத்திற்கு உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமலேயே அனைத்து தொழிற்சங்க உரிமைகளும்  அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற நிரந்தர தடையாணையின் பேரில்  அனைத்து உரிமைகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டு வருவது தெரிந்தும் பொய் பரப்புரை ஏனோ?