Thursday, September 21, 2017

அஞ்சல் மேற்பார்வையாளர் சங்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்து பொறுக்க முடியாமல் புழம்பும் மாற்று சங்கத்து சகோதரர்களே ....

அங்கீகாரம் இல்லை, உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை, மாதாந்திரப் பேட்டிகள் எல்லாம் எங்கள் சங்கத்திற்கு தரக்கூடாது என்று எல்லாம் பொய்பரப்புரைகளைக் கூறித்திரியும் தாங்கள் கீழ்க்காணும் உண்மைத் தகவல்களுக்கு பதிலளிக்கத் தயாரா?

  1. 1995ல் உறுப்பினர் சரிபார்ப்பின் இயக்குனரக உத்தரவின்படி, எழுத்தர்கள் எழுத்தர் சங்கத்தில் தான் இருக்க வேண்டும் எனவும், தபால்காரர்கள் தபால்காரர் சங்கத்தில் தான் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட இலாகா, மேற்பார்வையாளர்கள் மட்டும் மேற்பார்வையாளர் சங்கத்தில் இருக்கலாம், எழுத்தர் சங்கத்திலும் இருக்கலாம் என்று விதிமுறைகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க குறுக்கு வேலைகள் பார்த்தது யார்?

2. அஞ்சல் ஆய்வாளர்களை(IP),  அஞ்சல் எழுத்தர்கள்  சங்கத்தில் இணைய அரசு ஒத்துக் கொள்ளுமா? நீங்கள் ஏன் அதற்கும் குரல் கொடுக்கவில்லை? முடியுமா?

3. சூப்பர்வைசர்கள் மட்டும் கடைசிவரை எழுத்தர்களாகவே  இருக்கவும், எழுத்தர் சங்கத்திலே இருக்கவும் துடிப்பது ஏன்?

4.  உறுப்பினர் சரிபார்ப்பில், ஒருசார்பு இலாக்கா உத்தரவினை எதிர்த்து 1997ல் AIAPS சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இலாக்காவின் இத்தகைய நிலைப்பாடினை சரியான முறையில் நீதிமன்றத்தில் இலாக்கா நிருபிக்கத் தவறியதால், சூப்பர்வைசர்கள் எழுத்தர்களில் உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவது தவறு, எனவே சூப்பர்வைசர் சங்கத்திற்கு உறுப்பினர் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமலேயே அனைத்து தொழிற்சங்க உரிமைகளும்  அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற நிரந்தர தடையாணையின் பேரில்  அனைத்து உரிமைகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டு வருவது தெரிந்தும் பொய் பரப்புரை ஏனோ?


5. உங்கள் Group C எழுத்தர் சங்கத்தில், HSG II மற்றும் HSG I (Group B non gazetted) தோழர்களை  CCS recognised service association 1993 விதிமுறைகளின்படி,  உங்களது எழுத்தர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து நீக்கிவிட்டு உறுப்பினர் சரிபார்ப்பினை எதிர்கொள்ளத் தயாரா?

6. LSG தோழர்கள் கூட பதவி உயர்வு கேடர் என்பதால், எழுத்தர் சங்கத்தில் இருக்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்றால் IP தோழர்களையும் விட்டு வைத்தது ஏனோ?

7. நீங்கள் எங்கள் மீது புகார் அளிப்பது போல, எங்கள் சங்கம் புகார் அளித்தால் உங்களது சீனியர் கோட்ட மண்டல மாநில நிர்வாகிகளே, அடிப்படை உறுப்பினர்களாக கூட நீடிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?

8. நீதிமன்றத்தில் எங்களது அங்கிகாரத்திற்காக வழக்கு தொடரவில்லை, ஆனால் உறுப்பினர் சரிபார்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக ஒரு இலாக்கா உத்தரவு பிறப்பித்ததன் காரணமாகதான் வழக்கு தொடரப்பட்டு, நிரந்தர தடை உத்தரவினைப் பெற்று அனைத்து தொழிற்சங்க உரிமைகளும் பெற்று வருகிறோம். 

9. முன்பு IP அலுவலர்களும் LSG அலுவலர்களும் ஒரே ஊதியம் பெற்று வந்த நிலையில் இன்று LSG /PM Grade I ரூ.2800ம் IP ரூ.4600 பெற்றுவிட்டார்கள். மேற்பார்வையாளர்களுக்கும் அத்தகைய ஊதியத்தை பெற ஆவண செய்யாமல் விட்டது யார்? 4000 IP தோழர்கள் சாதித்தை 40000 உறுப்பினர்கள் இருப்பதாக மார்தட்டும் நீங்கள் சாதிக்க விட்டது ஏனோ?

10. ஆக எங்களது பல ஆண்டு பிரச்சினைகளை நீங்களும் தீர்க்கவில்லை. நாங்கள் எடுத்து முன்னேறிச் சென்றாலும் முட்டுக்கட்டை இடுவது ஏனோ?

11. ஆக எழுத்தர்கள் மட்டும்தான் விதிமுறைகளின்படி, எழுத்தர் சங்கத்தில் இருக்க வேண்டும் என்று AIAPS சங்கமும் உங்களைப் போல் புகார் அளிக்கத் தொடங்கினால் இப்போதைய பல கோட்ட மண்டல செயலர்கள் அடிப்படை உறுப்பினர்களாக கூட இருக்க முடியாது என்பதை சொல்லிக் கொண்டு, உங்கள் பதவி வேறு.... பாதை வேறு.... எங்கள் பதவி வேறு.... பாதை வேறு.... ஆகவே அதில் குறுக்கிடாமல், இனிமேல் எங்கள் மீதான பார்வையை திருப்பி உறுப்பினர்களுக்கு நன்மை செய்வதில் கவனம் செலுத்தினால் நல்லது.

தீவிரமான பிரச்சினைகளுக்கு என்றும் உங்களோடு தோள் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறிக்கொண்டு எங்களையும் இணைத்து போராட்டகளத்தை அமைக்காதது எங்களது குற்றமில்லை. அதை குற்றமாக சொல்லி திரிந்தால் அது பற்றி எங்களுக்கு  கவலையுமில்லை. 

_ AIAPS TN

No comments:

Post a Comment


Dont forget to post your comments. Your comments and suggestions are valuable to us